December 13, 2020
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த ஒரே அகாடமியை சேர்ந்த ஆறு கிராமப்புற கலைஞர்கள் சர்வதேச தமிழ் பல்கலைகழத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளனர்.
கோவையில் கடந்த ஒரு மாதங்களாக நாட்டுப்புற கலைகளில் தொடர் சாதனையாக ஒரே அகாடமியை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் பல்வேறு சாதனைகள் செய்து அசத்தினர்.ஆணி படுக்கையில் நின்று பறையிசைப்பது, கண்ணாடி துண்டுகள் மீது நின்று கரகாட்டம்,கைகளில் நெருப்பை ஏந்தியபடி ஒற்றைக்காலில் கரகம் என கிராம்ப்புற கலைகளில் தொடர்ந்து சாதனை செய்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது இந்த தொடர் சாதனையை பாராட்டி மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டத்தை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கி கவுரவித்துள்ளார். இந்நிலையில் கோவை கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனர் டாக்டர் கலையரசன் உட்பட பட்டம் பெற்ற அனைவருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.