வெறும் ரூ.1 விலையில் மிட்டாய்களை விற்று ரூ.300 கோடி வருமான பார்த்து பெரும் சாதனை படைத்துள்ளது பல்ஸ் நிறுவனம். டி.எஸ். குழுமத்தைச் சேர்ந்தது பல்ஸ் நிறுவனம்.
நுகர்வோர் சந்தையில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது. இதனால் இந்திய பல்பொருள் வர்த்தக சந்தையைக் கைப்பற்ற நாளுக்கு நாள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டிபோட்டுச் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில், டி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த பல்ஸ் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.1 விலையுள்ள பல்ஸ் மிட்டாய்களை விற்று, இந்திய அளவில் ரூ. 300 கோடி வர்த்தகம் செய்துள்ளது. இந்த பல்ஸ் மிட்டாய்கள், மாங்காய்ச் சுவை கொண்டதாகும்.
அதற்குச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய நுகர்பொருட்கள் சந்தையில் உள்ள ஓரியோ, மார்ஸ் பார் போன்ற நிறுவனங்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முயன்றும், ரூ. 300 கோடி ஆண்டு வர்த்தகத்தை எட்ட முடியவில்லை. இந்நிலையில், வெறும் மிட்டாய் விற்று டி.எஸ். குழுமம் இந்த சாதனையைப் படைத்துள்ளது.
பெட்டிக் கடைகள் முதல் பல வர்த்தக இடங்களிலும் ரூ.1 சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டால், உடனே பல்ஸ் அல்லது அதன் விலை கொண்ட மிட்டாய்களை வியாபாரிகள் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. இதுவும் பல்ஸ் மிட்டாய் விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றே கூறலாம்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது