• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு மாதத்திற்குள் கூட 3 வது அலை வர வாய்ப்புண்டு – சிறப்பு அதிகாரி சித்திக்

August 9, 2021 தண்டோரா குழு

கோவையில் 3 வது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்பபுண்டு இதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என சிறப்பு அதிகாரி சித்திக் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான சித்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் சராசரியாக 200 புதிய நபர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவையில் மக்களுக்கு கொரொனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கின்றது. சென்னையில் கோவிட் எதிர்ப்பு சக்தி 78 சதவீதமாக இருக்கின்றது. எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால்
கோவையில் 3 வது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்தார்.அதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என கூறினார்.

மேலும்,ஒரு மாதத்திற்குள் கூட 3 வது அலை வர வாய்ப்புண்டு எனவும் தெரிவித்தார்.முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருவது முழு ஊரடங்கை தவிர்கும். கோவைக்கு தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.ஆக்ஸிஜன் டேங்க் ஓன்று சென்னையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றது.இந்த முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதை எதிர் கொள்ள தயாராக இருக்கின்றோம்.அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 82 ஐ.சி.யு படுக்கைகள் இ.எஸ்.ஐ மரித்துவமனையில்
ஆக்ஸிஜன் படுக்கை 40ம்,ஐ.சி.யு படுக்கைகள் 30ம் குழந்தைகளுக்கு தயாராக இருக்கின்றது என தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க