February 5, 2021
தண்டோரா குழு
ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்கும் முடிவை குடியரசுத் தலைவர் மட்டுமே எடுக்க முடியும்.
தமிழக அரசின் தீர்மானத்தின் மீது என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என ஆளுநர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவை முடிவை அவமதித்து; அரசமைப்பு வழங்கும் மாநில உரிமையையும் கேலி செய்திருக்கிறார் கவர்னர். என்ன செய்வதம்மா என பலரும் கொதிப்போடு் கேட்டபடி உள்ளனர்.ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? பதிலை மாநில அரசுதானே சொல்லவேண்டும்? செயல்பட வேண்டும்? என பதிவிட்டுள்ளார்.