• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு டுவிட்டில் ஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிர்ஷ்டம் !

May 4, 2017 தண்டோரா குழு

பொதுவாக தங்கள் வாகனத்தை தங்களுக்கு பிடித்தால் அதனை தனது ஸ்டைலில் மாற்றியமைப்பவர்கள் பலர் இருக்கிறார். இதை யார் கவனிக்கப்போகிறார்கள் என்றெல்லாம் எண்ணாமல், தங்களுக்கு பிடித்தது போல் அதை செய்து முடிப்பவர்களுக்கு எப்போதாவது ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டம் கிடைக்கும். தற்போது கேரளாவில் ஒருவருக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

கடந்த மார்ச் 19-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த மஹிந்திரா குழுமத்தில் பணிபுரியும் அனில் என்பவர், எதர்ச்சியாக வழியில்,தன் ரசனைக்கேற்ப டிசைன் செய்த ஒரு ஆட்டோவைப் பார்க்கிறார். அந்த ஆட்டோ கிட்டத்தட்ட மஹிந்திரா கம்பெனியின் ஸ்கார்ப்பியோ போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்து வியந்த அனில் உடனே தனது மொபைலில் அதனை படம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதன் பின் தான் எடுத்தபடத்தை நல்லாருக்குல்ல சார்..? நம்ம டிசைன் இந்தியன் ரோட்ல எவ்ளோ பாப்புலர் பாருங்க என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு Tag செய்து ட்விட்டரில் போட்டுள்ளார்.

அடுத்த பத்து நிமிடத்தில்ஆனந்திடமிருந்து ரிப்ளை வந்தது. “அட… செம.. அவர் யார்னு பிடிச்சுக் குடுங்களேன். இந்த ஆட்டோவை நான் வாங்க ஆசைப்படறேன். பதிலுக்கு அவருக்கு ஒரு 4 வீலர் தர்றேனே..என டுவிட் செய்துள்ளார்.

இதையடுத்து, கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு கொச்சி மஹிந்திரா டீலரில் பணிபுரிகிறவர்கள்,கேரளாவின் ஒரு கிராமத்தில் இருக்கும் அந்த ஆட்டோக்காரர் சுனிலைக் கண்டுபிடித்தார்கள். விஷயத்தை அவர்கள் சுனிலிடம் சொல்ல அவரும் அடித்தது அதிர்ஷ்டம் என்று ஓகே சொல்லிவிட்டார். தற்போது அவர் மஹிந்திரா சூப்பர் மினி வேனின் உரிமையாளர்.

நேற்றைக்கு இதை ட்விட்டரில் போட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் ஆனந்த். இவரைக் கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

சுனிலுக்கு ஸ்கார்ப்பியோ மிகப் பிடிக்கும் என்பதால்தான், தனது ஆட்டோவை ஸ்கார்ப்பியோ ஸ்டைலிலேயே ரீ-டிசைன் செய்திருக்கிறாராம். ஆனந்த் நினைத்தால், சுனிலுக்கு ஸ்கார்ப்பியோவையே பரிசாகக் கொடுத்திருக்கலாம்தான். ஆனால், ஷேர் ஆட்டோவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்; மினி ட்ரக் ஆகவும் லோடு அடித்துக் கொள்ளலாம் என்பது சுப்ரோவின் ஸ்பெஷல் என்பதால் தான், ஆட்டோக்காரரான சுனிலுக்கு 5.50 லட்சம் மதிப்புள்ள சுப்ரோ வேனைப் பரிசாக இறக்கியிருக்கிறார் ஆனந்த்.

என்ன தான் ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ரெனோ, செவர்லே என்று எக்கச்சக்க வெளிநாட்டு கார்கள் இருந்தாலும் இந்திய நிறுவனமான மஹிந்திராவுக்கு இந்தியர்களிடத்தில் செம மவுசு உண்டு.

மேலும் படிக்க