June 13, 2018
தண்டோரா குழு
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கார் முன்பு செல்ஃபி எடுப்பதற்கு 38 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , வடகொரிய கிம் ஜாங் உன் இருவரும் சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் சந்தித்து பேசினர். பல்வேறு சந்தேகங்கள் மற்றும் ஊகங்களை தாண்டி, உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர், வடகொரிய அதிபர்களிடையேயான இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பை உலகமே எதிர்பார்த்தது. அதைபோல் இந்திய இளைஞர் மகாராஜ் சிங்கப்பூருக்கு ட்ரம்ப் வரும் போது அவருடன் செல்ஃபி எடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி அதிபர் கிம் உடனான சந்திப்புக்கு ட்ரம்ப் காரில் வரும் வழியில் இந்திய இளைஞர் மகாராஜ் மோகன் செல்ஃபி எடுத்து அந்த புகைப் படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ட்ரம்ப் பிரியரான மகாராஜ்மோகன் ஒரு செல்ஃபிக்காக சென்டோசா தீவில் உள்ள விடுதியில் 38,000 ரூபாய் செலவழித்து ஒருநாள் இரவு அறை எடுத்து தங்கியது தெரியவந்துள்ளது.