• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு சமூகத்தின் கதையைச் சொல்லும் உக்கடம் கலை மாவட்டம் !

February 17, 2022 தண்டோரா குழு

ஏசியன் பெயிண்ட்ஸ் & கோயம்புத்தூர் சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷனுடன் செயின்ட்+ஆர்ட் இந்தியா அறக்கட்டளை இணைந்து மேற்கொள்ளும், இந்தியாவின் மற்றொரு பொது கலை மாவட்டத்தை நிறுவுவதற்கான முயற்சியையானது தொடர்ந்து வருகிறது.

அதன்படி, உக்கடம் கலை மாவட்டம் (Ukkadam Art District) ஆனது கோவையின் உக்கடம் காலனியில் அமைந்துள்ள – TNUHDB (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) தளத்தில் உதயமாகியுள்ளது. கலை மாவட்டமாக இந்தியாவின் ஆறாவது மற்றும் மாநிலத்தின் இரண்டாவது திறந்தவெளி மற்றும் அனைவருக்குமான திறந்த பொது கலைக்கூடம் இதுவாகும்.

உக்கடம் கலை மாவட்டத்தின் 2வது பதிப்பு, உள்ளூர் பங்குதாரர்களான RAAC (கோயமுத்தூர் குடியிருப்பாளர்கள் விழிப்புணர்வு சங்கம்) மற்றும் CREDAI ஆதரவுடன் கோயம்புத்தூரின் அடுத்த அத்தியாயமானது புதிய அம்சத்துடன் உருவாகியுள்ளது. இதற்கான வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகிவருகிறது.

லிங்க்: https://www.youtube.com/watch?v=JBH4uUteBeM

2020 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சமகால கலைஞர்களுடன், அவர்களின் கலை மாவட்டத்தை நிறுவவும் விரிவுபடுத்தவும் தங்கள் தனித்துவமான படைப்புகளுடன் பங்களித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள், ஆத்மார்த்தமான அர்த்தம் சார்ந்த உறவைப் பிரதிபலித்தது, அன்றாட வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யவும், குடியிருப்பாளரின் சுற்றுப்புறத்தைப் பற்றிய விழிப்புணர்வை புதிய மற்றும் குறிப்பிடத்தக்க வெளிச்சத்தில் உயர்த்தவும் இது மேற்கொள்ளப்பட்டது.

புதிய பரிமாணங்கள் மற்றும் பார்க்கும் வழிகளைத் திறப்பதன் மூலம் மேஜிக் ரியலிசத்தை அன்றாட வாழ்க்கையில் புகுத்தியது ஹைலைட். பழக்கமான பொருள்கள், சமூக வாழ்க்கையை மையமாகக் கொண்ட சுற்றுப்புறத்தில், மக்கள், சமூகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கதைகளில் கவனம் செலுத்த ஒரு தூண்டுதலாக மாறும் என்பதே விஷயம்.

மேலும் படிக்க