July 21, 2018
தண்டோரா குழு
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இந்த சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,ஒரு சிறுமிக்குப் பாதுகாப்பில்லை என்பதை விட 17 பேர்களில் ஒருவனுக்குக்கூட மனச்சான்று இல்லையே என்பது தான் தேசிய சோகம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.