• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒமைக்ரான் உயிர்ப்பலி ஏற்படுத்துமா? – அழகப்பா பல்கலை .பேராசிரியர் ஜெயகாந்தன்

January 21, 2022 தண்டோரா குழு

பரவும் தன்மை அதிகமாக இருந்தாலும் ஒமிக்ரானால் உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்புகள் குறைவு என அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றன.ஆனாலும் கொரோனா வைரஸ் என்பது அடிக்கடி உருமாறி உயிர்ப்புடன் தொடர்கிறது. கொரோனா வைரஸ் டெல்டாவாக மாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது வேகமாக பரவும்
ஒமைக்ரான் வைரசாக அது பரிணமித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவவினாலும் உயிர் பலி ஏற்படும் வாய்ப்பு குறைவாக தான் இருக்கும் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரித கவலியல் துறை தலைவர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
IMG_20220121_122548
கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நோய்த்தொடர்பு புரதங்Vகளை அழிக்கும் மருந்துகள் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக தொடர் ஆராய்ச்சியில்
ஈடுபட்டு வருகிறோம்.ஒமைக்ரான் வைரஸ் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது. உலகளவில் பல்வேறு ஆராய்ச் சிகளில் கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படை மற்றும் உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி , 51 ஸ்பைக் புரதங்களில் ஏற்பட்ட மாற்றங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரவலுக்கு முக்கிய பங்காற்றும் ஸ்பைக் புரதம் 1.273 அமினோ அமிலங்களை கொண்டது.இந்த ஸ்பைக் புரதம் பல்வேறு வகையான மரபணு மாற்றங்களுக்கு
உட்படும் தன்மை கொண்டது. இது 13 வகையான ஆல்பா,10 வகையான பீட்டா, 13 வகையான காமா, 15 வகையான டெல்டா, 35 வகையான ஒமைக்ரான் போன்ற புரத மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

IMG-20220121-WA0074
துவக்கத்தில் ஸ்பைக் மூலக்கூறும் மனித மூலக்கூறும் பிணைப்பு ஏற்பட்டு இருந்த போது மைனஸ் 112.2 என இருந்தது.ஆனால் தற்போது ஒமைக்ரான் பிணைப்பு ஏற்படும் போது 139.8 என்ற நிலையில் உள்ளது.இதனால் தற்போது ஒமைக்ரான் அதிக அளவில் பரவி வருகிறது.பரவும் தன்மை அதிகமாக இருந்தாலும் உயிர்பலி ஏற்பட வாய்ப்பு குறைவாக தான் உள்ளது.எனினும் நோய் தடுப்பு
நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிப்பது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதே சிறந்தது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க