• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒமிக்ரான் எதிரொலி:கோவை கடைத்தெருக்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க திட்டம்

December 28, 2021 தண்டோரா குழு

கோவை கடைத்தெருக்களில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பரவி வருகிறது. தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலும் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள கேரளா மாநில எல்லைப்பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒருபகுதியாக கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, 100 அடி சாலை, காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் வணிக மற்றும் வர்த்தக நிறுவன உரிமையாளர்களிடம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றியே கடைகளை திறக்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கடைத்தெருக்களில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திருக்க வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என கடை உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும்,’’ என்றார்.

மேலும் படிக்க