April 10, 2021
தண்டோரா குழு
உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதனங்களின் ப்ராண்ட்டாக திகழும் ஒப்போ, இந்தியாவில் தனது புகழ்பெற்ற எஃப் சிரீஸ் ஸ்மார்ட் ஃபோன் வரிசையில் மற்றுமொரு மெல்லிய, அட்டகாசமான புதிய எஃப்19 ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தி உள்ளது. மிகவும் ஆற்றல் மிக்க 33வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் பெரும் சக்தி வாய்ந்த 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரியுடன், மிக குறைவான எடையில், மிக மெல்லிய வடிவமைப்புடன் கூடிய ஸ்மார்ட் ஃபோனாக, எஃப்19-ஐ ஒப்போ அறிமுகப்படுத்தி உள்ளது.
எஃப்19 ஸ்மார்ட் ஃபோனின் அறிமுக விழா மிக விரைவாக மேற்கொள்ளப்பட்ட அறிமுக நிகழ்வு என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறது. இந்நிகழ்வை ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஷாகீர் கான் தொகுத்து வழங்கினார். எஃப்19-ன் ப்ளாஷ் சார்ஜ்ஜின் வேகத்தை குறிப்பிடுவதைப் போலவே, மிக வேகமாக ஐந்தே நிமிடங்களில் அறிமுக விழா நடைபெற்றது. அதே நேரம், எஃப்19 ஸ்மார்ட் ஃபோன் அளிக்கும் 5.5 மணி நேர டாக் டைம்மை குறிப்பிடும் வகையில் இந்நிகழ்வை துரிதமாக மேற்கொண்டு புதுமையை நிகழ்த்தியிருக்கிறது ஒப்போ.
சமீபத்திய ஒப்போ எஃப்19 ப்ரோ சிரீஸ் உடன், ஒப்போ 10 மில்லியன் எஃப் சிரீஸ் தயாரிப்புகளை விற்பனை செய்து, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிறது. இந்த சாதனையை வெறும் 6 ஆண்டுகளில், குறுகிய காலத்தில் நிகழ்த்தி காட்டியிருக்கிறது ஒப்போ. இன்று எஃப் சிரீஸ், இந்தியாவில் இன்றைய தலைமுறையினரால் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட் ஃபோன்களாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. காரணம், இதன் பயனர்கள் தங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்த ஒரு அருமையான சாதனமாக இருப்பதால் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருக்கிறது.
மேலும், எஃப் சிரீஸ், ஸ்மார்ட்ஃபோன் துறையில், இதுவரையில்லாத பல அதிநவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு, ஒப்போ எஃப்3-ல் உள்ள டுயல் செல்ஃபி கேமரா மற்றும் ஒப்போ எஃப்7-ன் 25 எம்பி முன்பக்க கேமரா மற்றும் மிக மெல்லிய, நேர்த்தியான ஒப்போ எஃப்17 ப்ரோ ஆகியன குறிப்பிடத்தக்கவை.