June 23, 2021
தண்டோரா குழு
ஒன்றிய அரசு என்று அழைப்பது ஏன் ? என முதல்வர் முக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் முக. ஸ்டாலின்,
ஒன்றிய அரசு’ என்று சொல்வதை சமூக குற்றம் போல சிலர் சொல்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறதோ அதையே பயன்படுத்துகிறோம்.மாநிலங்கள் ஒன்று சேர்ந்துதான் ஒன்றியம் என பொருள் அது தவறானது அல்ல. ஒன்றியம் என்ற வார்த்தையைக் கேட்டு யாரும் மிரளத் தேவையில்லை.அதையே இனி எப்போதும் பயன்படுத்துவோம் என விளக்கமளித்தார்.