• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவிப்பு

September 14, 2019 தண்டோரா குழு

இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அல்-கைதா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன்தான் ஹம்சா பின்லேடன். இவர் ஒசாமா பின்லேடனை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார். ஹம்சா பின்லேடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக ஜூலை மாதம் முதல் பல ஊடகங்களில் யூக அடிப்படையில் செய்திகள் வெளியாகி வந்தன. இப்போது முதல் முறையாக அமெரிக்க அதிபர் இதை ஒப்புக்கொண்டுள்ளார் “ஆப்கானிஸ்தான் / பாகிஸ்தான் பிராந்தியத்தில்” அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஹம்சா கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா ஹம்சா பின்லேடன் தலைக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்த நிலையில் தற்போது ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க