• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ லவ் கோவை செல்பி கார்னரில் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர்

January 25, 2021 தண்டோரா குழு

உக்கடம் பெரியகுளம் மேம்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘ஐ லவ் கோவை’ செல்பி கார்னரில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக கோவையின் வெவ்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளத்தின் அழகை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், முதலமைச்சரை வரவேற்கும் விதமாக வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேலும், லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டு, நவீன நுட்பத்துடன் இயங்கும் எல்.இ.டி வண்ண விளக்குகள் கொண்டு ஒளி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து கோவையின் அடையாளமாக திகழும் ‘ஐ லவ் கோவை’ செல்பி கார்னரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றியுரை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்த வீரத்தமிழன் கோவை மக்களை சந்தித்தார். கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர். கோவை மாவட்ட மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.கோவை மக்களுக்கு நிறைய திட்டம் கொடுத்துள்ளார் முதலமைச்சர். இரண்டு நாட்கள் மக்களின் மகிழ்ச்சியை பார்த்துள்ளார். உலக தரத்திற்கு இணையாக இந்த திட்டத்தை கொடுத்துள்ளார் விவசாய முதலமைச்சர். ஆட்சி தாக்குபிடிக்குமா என்றும், கலைத்துவிடலாம் என்றும் கனவு கண்டார் ஸ்டாலின். ஆனால், விவசாயி ஒருவரால் நல்லாட்சி கொடுக்க முடியும் என்று நிரூபித்தவர் முதலமைச்சர். மாணவர்கள் ,இளைஞர்களின் சூப்பார் ஸ்டாராக உள்ளார். 2021ல் மீண்டும் முதலமைச்சராக வருவார். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்வில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜூனன், சண்முகம், கந்தசாமி, ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க