• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ லவ் கோவை அருகில் ஹீலியம் பலூன்களை பறக்க விட்ட மாவட்ட ஆட்சியர்

July 26, 2022 தண்டோரா குழு

44வது செஸ் ஒலிம்பியாட் முன்னிட்டு கோவை உக்கடம் பெரியகுளம் ஐ லவ் கோவை அருகில் ஹீலியம் பலூன் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் பறக்க விட்டு கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது.இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோவை உக்கடம் பெரியகுளம் ஐ லவ் கோவை அருகில் ஹீலியம் பலூன் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் பறக்க விட்டு பொதுமக்களுக்காக கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி அதிகாரிகள், ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க