• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.எஸ்.எல். லீக் கால்பந்து;சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் அறிமுகம்

November 30, 2019

ஐ.எஸ்.எல். லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் வரும் 1-ம் தேதி துவங்க உள்ளது.மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற உள்ள இதில் மணிப்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.

இந்நிலையில் சென்னை சிட்டி எஃப்சி அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. சீருடைகளை அணியின் தலைமை ஆலோசகர் விஜயராகவன் மற்றும் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ் ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சென்னை சிட்டி எஃப்சி அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ், சென்னை சிட்டி எஃப்சி அணியில் 10-க்கும் மேற்பட்ட தமிழக வீரர்கள் கலந்து கொண்டு விறையாட உள்ளதாகவும், தற்போது அணியில் கூடுதலாக வெளிநாட்டை சேர்ந்த கட்சுமி மற்றும் அடால்ஃபோ ஆகிய இரு வீர்ர்களை சேர்த்துள்ளதாக கூறினார்.தொடர்ந்து அவர், 10 ஆட்டங்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறிய அவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பார்வையாளர்களை அதிகம் எதிர்பார்ப்பதாகவும்,மேலும் நேரலை ஒளிபரப்பாக டி.டி ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் உதவி பயிற்சியாளர் சத்யா டகோரா,அணி ஒருங்கிணைப்பாளர் இன்குலாப் உட்பட அணி வீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க