June 13, 2018
தண்டோரா குழு
ஐரோப்பாவில் எல்லையை தாண்டிய காரணத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட கர்ப்பிணி பசு தண்டனையிலிருந்து தப்பியுள்ளது.
ஐரோப்பிய நாட்டின் ஆணைய வழிகாட்டுதலின் படி பக்கத்து நாட்டிற்கு செல்லவேண்டும் என்றால் அதற்குரிய ஆவணம் இருக்க வேண்டும்.அவ்வாறு ஆவணம் இல்லாமல் அந்த நாட்டு எல்லையை தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.இந்த நடைமுறை தான் அந்நாட்டில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பல்கேரியா,இந்த நாட்டில் கொபிலோவ்ட்சி என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரலம்பியேவ்.இவர் ஏராளமான பசுக்கள் வளர்க்கிறார்.இந்நிலையில் அவரது பசுகள் மேய்ச்சலுக்காக சென்ற,அவரது பசுக்களில் ஒன்றான பென்கா கர்ப்பமாக இருந்தது.அந்த பசு மேய்ந்துகொண்டே பல்கேரிய எல்லையை தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத செர்பியா என்கின்ற நாட்டிற்குள் நுழைந்தது.இதனால் எல்லையை தாண்டிய கர்ப்பிணி பசுவிற்கு ஐரோப்பிய அதிகாரிகள் மரண தண்டனையை விதித்திருந்தனர்.
இந்நிலையில்,கர்ப்பிணி பசுவிற்கு தண்டனை விதிக்ககூடாது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும்,வெளிநாடுகளிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து பல்கேரியா அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.இதனையடுத்து பல்கேரியா அரசு மரண தண்டனையை ரத்து செய்தது.