• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபோன் பெயரை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தத் தடை.

May 4, 2016 தண்டோரா குழு

உலகின் புகழ்பெற்ற மொபைல் போன் நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம், ஐபோன் பெயரில் மொபைல் போன்கள் விற்க நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனமான ஜிண்டாங் டியான்டி நிறுவனம் ஐபோன் என்ற பெயரில் மொபைல் போன் மற்றும் ஹேண்ட் பேக் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ஐபோன் என்ற பெயரை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் ஓரு வழக்குத் தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராகத் தீர்ப்பு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீனாவின் பெய்ஜிங் மாநகர நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாட்டல்களைக் கடந்த 2009ல் தான் சீனாவில் விற்கத் தொடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், ஐபோன் என்ற பெயரில் ஹேண்ட் பேக்குகள் மற்றும் மொபைல் போன் கவர்களைக் கடந்த 2007 முதலே விற்று வருகிறது ஜிண்டாங் டியான்டி நிறுவனம்.

இதனால் சீனாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் என்ற பெயரில் மொபைல் போன்களை விற்கத் தடை விதிக்கவேண்டும் என ஜிண்டாங் டியான்டி கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து சீனாவில் ஐபோன் என்ற பெயரை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது இது ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க