April 18, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.இதனால் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த கூடாது என தமிழ் அமைப்புகள், திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து,சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில்,பேச்சுவார்த்தையில் கடந்த ஒன்றரை மாதமாக நீடித்த சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது.இதனால் படப்பிடிப்பு மற்றும் புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே’என நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.