April 4, 2018
தண்டோரா குழு
ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் வரும் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது.இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில்,சூதாட்டத்தைத் தடை செய்யாமல் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று,சூதாட்ட புகாரில் சிக்கி,சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது,வரும் ஏப் 13ம் தேதிக்குள் பிசிசிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.