• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐன்ஸ்டினை விஞ்சிய இந்திய வம்சாவளி மாணவர்

June 30, 2017 தண்டோரா குழு

இந்திய வம்சவாளி மாணவன் ஐகியூ தேர்வில் ஐன்ஸ்டீனை விட அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

இங்கிலாந்தின் Reading Town என்னும் நகரில் இந்திய வம்சவாளி மாணவன் அர்னவ் ஷர்மா(11), தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அவன் மென்சா என்னும் கடினமான ஐகியூ தேர்வை எந்த தயாரிப்புமின்றி எழுதி 162 மதிப்பெண் பெற்று, உலகின் அதிக ஐகியூ உடைய ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங்கை பின்னுக்கு தள்ளியுள்ளான்.

அர்னவ் தனது வெற்றியை குறித்து பேசுகையில்,

“இங்கிலாந்தின் சால்வேஷன் மையத்தில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுதும் நேரம் சுமார் இரண்டரை மணி ஆகும். இந்த தேர்வுக்கு சுமார் 7 அல்லது 8 பேர் கலந்துக்கொண்டனர். இதில் இரண்டு பேர் சிறுவர்கள் மற்ற எல்லோரும் பெரியவர்கள். இந்த தேர்வை எழுத நான் எந்த தயாரிப்பும் செய்யவில்லை. தேர்வை பற்றி எந்த பதற்றமுமில்லை. தேர்வின் முடிவுகளை குறித்து எனது பெற்றோரிடம் கூறியபோது, அவர்கள் ஆச்சரியமும் மிக்க மகிழ்ச்சியும் அடைந்தனர்” என்று தெரிவித்தான்.

அர்னவின் தாய் கூறுகையில்,

“விடுமுறைக்கான இந்தியா வந்திருந்த போது, அர்னவின் தாத்தாவும் பாட்டியும் அவனுடைய அறிவு திறனை கண்டு, அவன் படிப்பில் சிறந்து விளங்குவான் என்று கூறினார். இரண்டரை வயதிற்குள் அவனுடைய கணித அறிவை கண்டு வியந்தேன்” என்று கூறினார்.

லண்டனின் கிராஸ்பீல்ட் பள்ளியில் படிக்கும் அர்னவ், ஈடன் கல்லூரி மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரிக்கு இப்போதே தேர்வு செய்யப்பட்டுள்ளான். அர்னவுக்கு பாட்டு மற்றும் நடனத்தின் மீது அதிக ஆர்வமுண்டு. அவனுடைய 8வது வயதில் ‘Reading Got Talent’ என்னும் போட்டியில் கலந்துக்கொண்டு அரை இறுதி சுற்று வரை வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க