• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐந்து நாட்களில் பாண் கார்டு வாங்கிய குழந்தை.

March 11, 2016 வெங்கி சதீஷ்

இந்தியாவில் நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பாண் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

இதை வாங்கி வைத்துக்கொண்டால் ஆண்டு தோறும் வருமானவரி செலுத்துவதற்கும், அதிக விலையுள்ள பொருட்களை வாங்கும்போதும் பயன்படும். இந்நிலையில் இது மிகப்பெரிய தொழிலதிபர்களே இன்னும் வாங்கி வைக்காத நிலையில் குழந்தைகளுக்கு கூட வாங்கி வைக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

முதன் முதலில் ஒரிசாவைச் சேர்ந்த ஆயுஷ் ரஞ்சன் ராவுட் என்ற 3 மாத குழந்தைக்கு நிரந்தர கணக்கு எண் வழங்கப்பட்டது. பின்னர் மும்பையைச் சேர்ந்த கிருஷ்ண தாக்கர் என்ற 56 நாட்களே ஆனா குழந்தைக்கும், சென்னையைச் சேர்ந்த 49 நாட்களே ஆனா அக்சிதா என்ற குழந்தைக்கும் வழங்கப்பட்டது.

தற்போது இந்தச் சாதனைகளை எல்லாம் முரியடிக்கும் வண்ணம் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த குமார் சாஜல், மிர்தி சின்ஹா ஆகியோரது 5 நாளே ஆனா குழந்தை ஆஷிக்கு பாண் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

இதுதான் இதுவரை குறைந்த வயதில் நிரந்தர கணக்கு எண் வைத்துள்ள குழந்தை என்ற சாதனையை படைத்துள்ளது. இதன் பிறகாவது பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் நிரந்தர கணக்கு எண் வாங்கி கணக்கு வழக்குகளை முறையாக வைத்திருக்க வேண்டும் என்பதே இலக்கு என வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க