November 28, 2017
தண்டோரா குழு
ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(நவ 28) துவக்கி வைத்தார்.
இன்று காலை ஹைதராபாத் விமான நிலையம் வந்த பிரதமரை, தெலுங்கானாவின் ஆளுநர் நரசிம்ஹா, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.
பின்னர் மியாபூர் முதல் நாகோல் வரை உள்ள ரெயில் சேவையை பிரதமர் மோடி, ஆளுநர் நரசிம்ஹன் மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த சேவை நாளை முதல் பொதுமக்களின் பயன்ப்பாட்டிற்காக கொண்டு வரப்படுகிறது.
ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் அதிகாரிளுடன் மியாப்பூரிலிருந்து குகட்பள்ளி வரை பயணம் செய்தனர்.