• Download mobile app
17 Dec 2025, WednesdayEdition - 3598
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு டாடா குழுமம் பாராட்டு, கார் பரிசு

December 17, 2025 தண்டோரா குழு

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை, அவர்களின் சிறப்பான சாதனையைப் பாராட்டி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக் கவுரவித்தது.

மும்பையில் உள்ள ‘பாம்பே ஹவுஸில்’ நடைபெற்ற பாராட்டு விழாவில், உலகக் கோப்பை வென்ற அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும், டாடா மோட்டார்ஸ் புதிதாக அறிமுகம் செய்துள்ள ‘டாடா சியரா’ கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்தது.இந்த விழாவில் டாடா சன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் லிமிடெட் தலைவர் சந்திரசேகரன் மற்றும் டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சைலேஷ் சந்திரா உள்ளிட்ட டாடா குழுமத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது என்.சந்திரசேகரன் கூறுகையில்,

ஜூலை 1983-ல் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றபோது, அது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய தருணமாக அமைந்தது. அந்த வெற்றியைக் கண்டு வளர்ந்த ஒரு சிறுவன், பிற்காலத்தில் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த வீரராக திகழ்ந்தார். இறுதியில் அவரும் ஒரு உலகக் கோப்பையை வென்றார்; அவர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.அதேபோல், கடந்த நவம்பர் 2-ம் தேதியை இன்றைய இளைஞர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

அன்றைய தினம்தான் இந்திய மகளிர் அணி, தங்களால் முடியும் என்று அவர்களின் தீவிர ரசிகர்கள் நம்பியதைச் செய்து காட்டினர். இறுதியாக உலகக் கோப்பை அவர்களின் வசமானது. அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் விளையாடினர். ஒவ்வொரு விக்கெட்டிற்கும், ஒவ்வொரு ஓட்டத்திற்கும் எதிர் அணியினரை கடுமையாகப் போராட வைத்தனர். எதுவும் எளிதாகக் கிடைக்கவில்லை. எதிரணிகள் பெரிய ஸ்கோர்களைக் குவித்தபோதும், இந்திய அணியின் போராட்ட குணத்தால் அவர்களால் எதிர் அணியால் வெற்றி பெற முடியவில்லை.இறுதி வெற்றியைத் தாண்டி, இத்தகைய தருணங்கள்தான் நம் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தன.

இந்த அணியின் சிறப்பான கலாச்சாரம் பல ஆண்டுகால முயற்சி, சோதனை, ஏமாற்றம் மற்றும் வெற்றிகளின் மூலம் உருவானது. இவர்களின் வெற்றி நமது இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். கடின உழைப்பின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறை இதிலிருந்து கற்றுக் கொள்ளும். ஒரு பெரிய கனவை அடைவதற்குத் தேவையான விடாமுயற்சியையும், கூட்டு முயற்சியின் பலனையும் இந்த அணி நாட்டிற்கு உணர்த்தியுள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் வீராங்கனைகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களையும், பாராட்டி கவுரவிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் சார்பில் ‘டாடா சியரா’ காரை பரிசாக வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார். வீராங்கனைகள் தங்களுக்கு விருப்பமான ‘சியரா’ மாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க