• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐசிஐசிஐ வங்கி வழங்கும் இந்திய ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான‘டிரேட் எமர்ஜ்’ ஆன் லைன் தளம் அறிமுகம்!

November 23, 2021 தண்டோரா குழு

இந்தியா முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான டிஜிட்டல் வங்கி சேவை மற்றும் மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை ஒரேதளத்தில் வழங்கக் கூடிய ஐசிஐசிஐ வங்கியின் ஆன்லைன் இணையதளமான ‘டிரேட் எமர்ஜ்’ தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

முதன் முறையாக அனைத்து எல்லைகளையும் கடந்து வர்த்தகத்தை எந்த வித தடங்கலின்றி, விரைவானதாகவும் வசதியானதாகவும் ஆக்குகிறது. ஏனெனில் இது ஒரே இடத்தில் பல்வேறு வகையான வசதிகளை வழங்குகிறது. இதனால் பல்வேறு வகையான செயல்பாடுகளுடன் கூடிய பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை வெகுவாக குறைக்கிறது. நடப்பு ஃ சேமிப்பு கணக்குகளை வழங்குதல், விரிவான வர்த்தக சேவைகள் (கடன் கடிதம் ஃ வங்கி உத்தரவாதம் ஃ வர்த்தக கடன் போன்றவை) போன்ற வங்கி சேவைகள், கார்ப்பரேட் இணைய வங்கி சேவை மற்றும் ஆன்லைன் வர்த்தகம், அந்நிய செலாவணி பரிமாற்றத் தீர்வுகள், பணம் செலுத்துதல் மற்றும் சேகரிப்பு சேவைகள் மற்றும் கடன் அட்டைகள் போன்றவற்றுக்கான டிஜிட்டல் சேவைகள் ஆகியனவும் இவற்றில் கிடைக்கும்.

மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளின் பட்டியலில் வர்த்தக தொழிலை தொடங்குதல், சர்வதேச அளவில் 181 நாடுகளில் உள்ள சுமார் 15 மில்லியன் கொள்முதல் செய்பவர்கள் மற்றும் விற்பனையாளர்களின் வர்த்தக தரவு தளத்தை அணுகுதல், பிரபலமான கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் கடன் தகுதி அறிக்கைகளை சரிபார்த்தல், ஏற்றுமதி முன்பதிவுக்கான தளவாடத் தீர்வுகள், கடைசி மைல் கண்காணிப்பு, காப்பீட்டு சேவைகள் குறிப்பாக கப்பல் வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கான காப்பீடு, இவை அனைத்தும் ஒற்றை சாளர முறையில் ஆன்லைனில் கிடைக்கும் வசதி போன்ற பல்வேறு தரப்பட்ட சேவைகள் இதில் கிடைக்கும். இந்த சேவைகள் அனைத்தும் அந்தந்த துறைகளில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும்.

இந்த முன்னெடுப்பு குறித்து ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குநர் விசாகா முல்யே கூறுகையில்,

“கடந்த காலங்களில், ஒரு நிலையான வளர்ச்சி வரலாற்றுடன், சர்வதேச ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகித்து வந்தது. தேசத்தின் இளைஞர்களின் வளம், வலுவான நுகர்வோர் தேவை, ஆரோக்கியமான உற்பத்தி மற்றும் அரசின் ஆதரவான முன்னெடுப்புகள் போன்ற பல்வேறு காரணிகள், இந்த வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தன. மேலும் 2021-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில், நம்முடைய ஒட்டுமொத்த ஏற்றுமதி (வர்த்தகம் மற்றும் சேவைகள் ஆகியவை இணைந்த) மற்றும் இறக்குமதி, ஏறக்குறைய 780 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது மேலும் இது கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் வேகமான, துரித வளர்ச்சியாகும்’’

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மற்றும் பல்வேறு வங்கி சேவைகளுக்கான விரிவான டிஜிட்டல் வசதிகளை இந்த “டிரேட் எமர்ஜ்” இணையதளம் வழங்குகிறது. நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் நேரடி செயல்பாடுகளில் உள்ள சிக்கல்களை களைவதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களின் ஆற்றல் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கம் ஆகும். கார்ப்பரேட்டுகள் மற்றும் அது சார்ந்த ஒட்டுமொத்த வணிக சூழலுக்கும் சிறப்பாக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் வங்கி சேவைகளோடு, மதிப்புகூட்டப்பட்ட முழுமையான தீர்வுகளையும், பல்வேறு முன்னெடுப்புகளின வாயிலாக வழங்குவது இந்த வங்கி மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாகும். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களாக இல்லாத போதிலும் அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கும் இதன் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்” என்றார்.

வங்கியால் வழங்கப்படும் சில மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் :

இந்தியாவில் ஏற்றுமதி-இறக்குமதி தொழிலை நிறுவ விரும்பும் நிறுவனங்களுக்கு இது உதவுகிறது. முக்கியமாக பதிவு செய்தல், உரிமம் பெறுதல், இறக்குமதி ஏற்றுமதியாளர் குறியீட்டு எண், சரக்கு மற்றும் சேவை வரிக்கான பதிவு மற்றும் இந்தியாவிலிருக்கும் இந்திய சரக்கு வாரியம் அல்லது ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் வழங்கும் பதிவு மற்றும் உறுப்பினர் சான்று ஆகியவற்றை பெற இது உதவுகிறது. “இந்தியா பைலிங்” என்ற ஆன் லைன் வணிகம் மற்றும் வரி தாக்கல் செய்யும் இணையதளத்துடன் இணைந்து இந்த டிஜிட்டல் வசதியை அளிக்கிறது. நாட்டின் வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் கீழ் குறிப்பிட்ட சில ஏற்றுமதி சலுகைகளை பெற வர்த்தகர்களுக்கு இது உதவுகிறது.

தகவல் சேவைகள் :

“டிரேட் எமர்ஜ்” இணையதளத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் துறையினர் அது தொடர்பான தகவல்களை இங்கு பெறலாம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் தகவல் புதுப்பிப்புகள் ஃ அறிவிப்புகள் ஃ வழிகாட்டுதல்கள், சுங்கத்துறை செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள், கட்டண குறித்த தகவல்கள் போன்றவற்றை இந்த “டிரேட் எமர்ஜ்” இணையதளத்தில் பெறலாம். இந்தியாவில் வர்த்தக மேம்பாட்டுக்கான உயரிய அமைப்பான, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு உடன் இணைந்து இந்த தகவல்களை வழங்குகிறது.

181 நாடுகளில் உள்ள கூட்டு நிறுவனங்களின் சர்வதேச தரவுகளை கையாளுதல்:

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள பொருத்தமான வாடிக்கையாளர்களை கண்டறிய அதிக நேரம் மற்றும் முயற்சியையும் செலவழிக்க வேண்டியுள்ளது. அதற்காக, முந்தைய வர்த்தக ஆவணங்கள் மற்றும் பொருத்தமான வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை போன்ற தகவல்களை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள “மார்கெட்டிங் இன்டலிஜென்ஸ்” பிரிவின் கீழ் 181 நாடுகளில் உள்ள சுமார் 15 மில்லியன் கொள்முதலாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் சர்வதேச தரவுகளை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஆராய முடியும். நிறுவனங்களின் பரிவர்த்தனை வரலாறு, வர்த்தக செயல்பாடு போன்றவை குறித்து முக்கியமான தரவுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பொருத்தமான வாடிக்கையாளரை தேர்வு செய்ய இயலும். தி டாலர் பிசினஸ் என்ற சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி தரவு மற்றும் ஆய்வுத்தளத்தோடு இணைந்து வங்கி இந்த சேவைகளை வழங்குகிறது.

தகுதியான வர்த்தக கூட்டாளிகளை சரிபார்த்தல்:

ஒரு பொருத்தமான வாடிக்கையாளரை தேர்வு செய்த பிறகு, சர்வதேச கடன் தகவல்களை வழங்கும் சிஆர்ஐஎப் என்ற நிறுவனம் அளிக்கும் வர்த்தக தகவல் அறிக்கைகள் வாயிலாகவும், வர்த்தக முடிவுகளை மேற்கொள்வதற்கான தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளை வழங்கும் உலகின் முன்னணி நிறுவனமான டன் அண்டு பிராட்ஸ்ட்ரீட் அளிக்கும் அறிக்கையின் வாயிலாக நம்பகத்தன்மையை சரிபார்க்க இயலும்.

தொடக்கம் முதல் இறுதி வரையிலான லாஜிஸ்டிக் தீர்வுகள்:

கூட்டாளியை முடிவு செய்த பின்னர், ஒரு ஏற்றுமதியாளரோ அல்லது இறக்குமதியாளரோ சரக்கு பரிவர்த்தனை தொடர்பான தேவைகளுக்கு லாஜிஸ்டிக் ஆதரவை பெற இயலும். “டிரேட் எமர்ஜ்” இணையதளத்தில் பல்வேறு வகையான சரக்கு பரிவர்த்தனை தெரிவுகளை பல்வேறு வகையான கட்டண பிரிவுகளில் பெற இயலும். மேலும் முந்தைய பல்வேறு ஏஜென்சிகளின் தொடர்பால் மிகுந்த கால விரயம் ஏற்பட்டு வந்த நடைமுறையல்லாமல் உடனுக்குடன் சரக்குகளுக்கான இடம் முன்பதிவு செய்ய இயலும். இந்த இணையதளத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு சரக்கு செல்லும் நடைமுறையில் இறுதி மைல் கண்காணிப்பு சேவையை தடையில்லாமலும், குறைந்த செலவிலும் வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு திறனுடன் கூடிய சரக்கு பரிவர்த்தனை, மேலாண்மை இணையதளங்களான ஷிப்ஸி மற்றும் ஷிப்வேவ்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்த டிஜிட்டல் சரக்கு பரிவர்த்தனை சேவையை வழங்குகிறது.

காப்பீட்டு சேவைகள் :

இந்த இணையதளமானது ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அவர்களது வர்த்தகத்தை பாதுகாக்கும் முகமாக இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஐசிஐசிஐ லம்பார்ட் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு காப்பீட்டு திட்டங்களை வழங்குகிறது. மரைன் டிரான்சிஸ்ட் என்ற காப்பீட்டு மூலமாக சரக்குகளுக்கான பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு குழு உடல் நல காப்பீடு, தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு காப்பீடு மற்றும் சொத்து காப்பீடு போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் படிக்க