• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐசிஐசிஐ பேங்க் ஹெச்பிசிஎல் சூப்பர் சேவர் கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு அறிமுகம்!

July 23, 2021 தண்டோரா குழு

வாடிக்கையாளர்கள் பல்வேறு கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒரேயொரு அட்டையில் அவற்றின் எல்லா பலன்களையும் வெகுமதி புள்ளிகளையும் பெறுவதைச் செயல்படுத்தவல்ல ஒரு கோ-பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டுடன் இணைந்து வெளியிட்டுள்ளது ஐசிஐசிஐ வங்கி.

ஐசிஐசிஐ பேங்க் சூப்பர் சேவர் கிரெடிட் கார்டு எனும் பெயரிடப்பட்டுள்ள இந்த அட்டையைத் தினமும் பயன்படுத்தி எரிபொருள் மட்டுமல்லாமல் மின்சாரம், மொபைல், பிக் பஜார் மற்றும் டி-மார்ட் போன்ற டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், இ-வர்த்தகத் தளங்கள், இதர விற்பனை நிலையங்கள் என்று பல பிரிவுகளில் மிகச்சிறப்பான வெகுமதிகள் மற்றும் பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். இதே போன்று செயல்படும் மற்ற நிறுவனங்களின் கடன் அட்டைகள் ஒரு குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே பலன்களை வழங்கிவரும் நிலையில், விசாவினால் செயல்படுத்தப்படும் இந்த அட்டையானது தனித்துவமானதாக விளங்குகிறது.

இது பற்றி ஐசிஐசிஐ வங்கியின் அசையும் சொத்துகள் பிரிவு தலைவர் சுதீப்தா ராய் பேசுகையில்,

வளரும் மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தீர்க்கும் புதுமையான முன்மொழிவுகளை வழங்கத் தொடர்ச்சியாகப் பாடுபட்டு வருகிறது ஐசிஐசிஐ வங்கி. ஹெச்பிசிஎல் உடன் இணைந்து ஐசிஐசிஐ பேங்க் ஹெச்பிசிஎல் சூப்பர் சேவர் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். தடைகளை உடைத்து, வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிமாற்றத்திலும் இந்த அட்டை சேமிப்பைச் செயல்படுத்துகிறது. அதுவே, இந்த அட்டையை சேமிப்புகளின் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறது.டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் வசதியை பயன்படுத்தும்போது, வாடிக்கையாளர்களுக்கு இந்த அட்டை அதிக சேமிப்பைத் தருமென்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் எஸ்கே சூரி பேசுகையில்,

ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து, தனித்துவமான சலுகைகள் மற்றும் வெகுமதிகளுடன் வாடிக்கையாளர் அனுபவத்தை விரிவுபடுத்தும் ஐசிஐசிஐ பேங்க் ஹெச்பிசிஎல் சூப்பர் சேவர் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவதில் ஹெச்பிசிஎல் மகிழ்ச்சி கொள்கிறது.சில்லறை விற்பனையகங்களில் டிஜிட்டல் கட்டணச் சூழலை ஊக்குவிப்பதில் இது உதவிகரமாக அமைவதோடு, புதுமையான சலுகைகளுடன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.

ஐசிஐசிஐ வங்கி இணையதளம் அல்லது அதன் மொபைல் பேங்கிங் செயலியான ஐமொபைல் பே முலமாக,வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ பேங்க் ஹெச்பிசிஎல் சூப்பர் சேவர் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும். அதன்பின்னர் 100 சதம் நேரடி மனித தொடர்பற்ற, காகிதமற்ற முறையில் ஒரு டிஜிட்டல் கார்டை பெறலாம். ஒரு சில நாட்கள் கழித்து, வாடிக்கையாளர்களுக்கு சாதாரண கடன் அட்டை அனுப்பப்படும்.

மேலும், ஐமொபைல் ஃபே செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களது பரிவர்த்தனை அமைப்பு மற்றும் கடன் வரம்பை நிர்வகிக்க முடியும். அது மட்டுமல்லாமல், ஐமொபைல் ஃபே மற்றும் இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தி ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டையை அப்கிரேடு செய்து ஐசிஐசிஐ பேங்க் ஹெச்பிசிஎல் சூப்பர் சேவர் கிரெடிட் கார்டாக மாற்றிக் கொள்ளலாம்.

ஐசிஐசிஐ பேங்க் ஹெச்பிசிஎல் சூப்பர் சேவர் கிரெடிட் கார்டின் முக்கிய அம்சங்கள் ஹெச்பிசிஎல் சில்லறை விற்பனை நிலையங்களில் எரிபொருள் நிரப்பும்போது வழங்கப்படும் 5 சதம் கேஷ்பேக்கில் 4 சதம் கேஷ்பேக்கும் 1 சதம் கூடுதல் கட்டண தள்ளுபடியும் அடங்கும். ஹெச்பிசிஎல்லின் ஹெச்பி ஃபே செயலி மூலமாக எரிபொருள் நிரப்புகையில், கூடுதலாக 1.5 சதம் பலன்களை ஃபே பேக் வெகுமதி புள்ளிகளாகப் பெறலாம். மின்சாரம், மொபைல் மற்றும் பிக்பஜார், டி-மார்ட் போன்ற பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் பயன்படுத்தும்போது 5 சதம் பலன்களை ஃபேபேக் வெகுமதி புள்ளிகளாகப் பெறலாம்.

உள்ளூர் கடைகளில் ஷாப்பிங் செய்வது, இ-வர்த்தகத் தளங்களில் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்வது உள்ளிட்ட மற்றனைத்து பிரிவுகளிலும் ஒவ்வொரு முறை ரூ.100 செலவழிக்கும்போதும் 2 ஃபேபேக் புள்ளிகளை பெறலாம். ஒரு இணைப்பு பலனாக வழங்கப்படும் 2000 ஃபேபேக் புள்ளிகள், அட்டை செயல்பாட்டுக்கு வரும்போது வாடிக்கையாளரின் ஃபேபேக் கணக்கில் சேர்க்கப்படும்.

ஹெச்பி ஃபே செயலியைப் பயன்படுத்தி முதன்முறையாக ரூ.1,000 அல்லது அதற்கு மேல் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது, அதன் வேலட்டில் ரூ.100 மதிப்புள்ள கேஷ்பேக் செலுத்தப்படும்.

மதிப்பு கூட்டப்பட்ட பலன்கள் :

சிறப்பான 24×7 சாலையோர உதவி எனும் அம்சம் இத்துறையில் முதன்முறையாக வழங்கப்படுகிறது. ரூ.1,50,000 செலவழிக்கும்போது ஆண்டுக் கட்டணம் தள்ளுபடி.உள்ளூர் விமான நிலைய ஒய்வறைகளைப் பயன்படுத்த சிறப்பு அனுமதி. ஃபுக்மைஷோ மற்றும் ஐநாக்ஸில் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான முன்பதிவை மேற்கொள்ளும்போது பிரத்யேக தள்ளுபடி. வங்கியின் உணவு விருந்து திட்டங்கள் மூலமாக உணவகளுக்கு பிரத்யேகச் சலுகைகள். வாடிக்கையாளர்களின் ஃபேபேக் கணக்கில் ஃபேபேக் புள்ளிகள் சேர்க்கப்படும்; அட்டை வழங்கப்படும் நேரத்தில் இது தானியங்கி முறையில் உருவாக்கப்படும். ஃபேபேக் இணையதளம், ஹெச்பி பே செயலி அல்லது ஃபேபேக் கூட்டு நிறுவனங்களின் விற்பனையகங்கள் / இணையதளங்களில் இந்த புள்ளிகளை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தி பலன்களைப் பெற முடியும். ஹெச்பிசிஎல் சில்லறை விற்பனையகங்களிலும் கூட இந்த ஃபேபேக் புள்ளிகளை வெகுமதிகளுக்காக பயன்படுத்த முடியும்.

மேலும் படிக்க