• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐசிஐசிஐ பேங்க் கோயம்புத்தூரில் ஒரு புதியகிளையை துவக்கியது

August 16, 2023 தண்டோரா குழு

ஐசிஐசிஐ பேங்க், கோயம்புத்தூர் பீளமேட்டில் ஒரு புதிய கிளையை அமைத்துள்ளது. இது இந்நகரில் உள்ள இந்த பேங்க்கின் 29-வது கிளை ஆகும். மேஃப்ளவர் சிக்னேச்சரில் அமைந்துள்ள இந்த கிளையானது, வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் பணத்தை திரும்பப் பெறுதல் மற்றும் டெபாசிட் செய்யும் சேவைகளை வழங்குவதற்காக ஒரு ஏடிஎம் உடன் கூடிய பண மறுசுழற்சி இயந்திரத்தை கொண்டுள்ளது.

இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவரும், சக்தி குழும நிறுவனங்களின் இயக்குனருமான திரு. டி. ராஜ்குமார் இந்த கிளையை திறந்துவைத்தார். இந்தக் கிளையானது, கடன் அட்டை சேவைகளுடன், சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள் உட்பட, நிலையான மற்றும் தொடர்வைப்புத் தொகைகள், வணிகக்கடன், வீட்டுக்கடன், தனிநபர்கடன், வாகனக்கடன், தங்கக்கடன் மற்றும் அந்நிய செலாவணி சேவைகள் உள்ளிட்ட ஒரு விரிவானவகையின் கணக்குகள், வைப்புக்கள் மற்றும் கடன்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

கூடுதலாக,இந்த கிளை என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்குகிறது.இந்த வங்கி, அதன் வளாகத்தில் லாக்கர் வசதியையும் வழங்குகிறது.இது திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் மாதத்தின் முதல்,மூன்றாவது மற்றும் ஐந்தாவது சனிக்கிழமைகளில் காலை 9:30 முதல் மாலை 3:00 மணிவரை செயல்படும். தமிழ்நாட்டில், இந்த வங்கி 590 கிளைகள் மற்றும் 1,930 க்கும் மேற்பட்ட ஏடிஎம்களின் ஒரு பரந்த நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியானது, கிளைகள், ஏடிஎம்கள், கால் சென்டர்கள், இன்டர்நெட் பேங்கிங் (www.icicibank.com) மற்றும் மொபைல் பேங்கிங் ஆகியவற்றின் ஒரு பலசேனல் விநியோக வலையமைப்பு மூலம் அதன் பெரிய வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்கிறது.

மேலும் படிக்க