• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட 8 பேர் மீது குண்டர் சட்டம் – கோவை கமிஷனர் அதிரடி

January 13, 2018 தண்டோரா குழு

கோவையில் ஏ.டி.எம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 8 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்திரவிட்டார்.

கோவை பீளமேடு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி அடுத்தடுத்து மூன்று தனியார் வங்கி ஏ.டி.எம்கள் உடைக்கப்பட்டு 30 லட்ச ரூபார் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக வடமாநில கொள்ளையர்கள் ஜில்பிகர், முஸ்டாக், மோசம்கான், சுபேர், அமித்குமார், சுபேர், முபாரக் , அமீன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தமிழகம் ,கேரளா ,கர்நாடகா போன்ற மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஏ.டி.எம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 8 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்திரவிட்டார்.

இந்நிலையில் கொள்ளை கும்பலிடம் இருந்து 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யபட்ட நிலையில் 27 லட்ச ரூபாயுடன் தலைமறைவான கும்பலின் தலைவன் அஸ்லாம் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகியோரை பிடிக்க உதவி ஆணையர் தலைமையில் தனிப்படையினர் ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் முகாமிட்டு இருந்தனர்.

ஆனால், ஒரு வாரமாக முகாமிட்டு இருந்தும் இருவரையும் பிடிக்க முடியாததால் தனிப்படையினர் நேற்று இரவு கோவை திரும்பினர்.

மேலும் படிக்க