• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.டி.எம் கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐஜி பாராட்டு !

March 3, 2021 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் கிளை பேங்க் ஆப் பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ஏ.டி.எம் இயந்திரத்தை ரூ 1,00,100- பணத்துடன் கடந்த 28.02.2021 ஆம் தேதி அதிகாலை 04.00 மணியளவில் காரில் வந்த மர்ம நபர்கள் இயந்திரத்துடன் காரில் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். மேற்படி சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரவுபடி திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல்கண்காணிப்பாளர்
ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் காங்கேயம் துணை கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம்,காங்கயம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், மற்றும் வெள்ள கோவில் காவல் ஆய்வாளர் பார்த்திபன், ஊத்துக்குளி சார்பு ஆய்வாளர். முருகேசன், சார்பு ஆய்வாளர் கோபால், சார்பு ஆய்வாளர் காமராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வேலுச்சாமி மற்றும் மதியழகன் ஆகியோர் அடங்கிய 7 சிறப்பு தனிபடைகள் அமைக்கப்பட்டு மேற்படி குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை 06.00 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம் , திருநகர் காலனி,தனியாருக்கு சொந்தமான குடோன் அருகே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கண்டெய்னர் ஈச்சர் லாரியை கண்டுபிடித்தும் அதிலிருந்த இந்த வழக்கினுடைய எதிரிகள் 1. ராகுல்(24), 2. ரபிக்(24).3.ஷாகித்(25),4.ஷாஜித்(21), 5. இர்சாத்(38), 6. காசிம் கான்(45), ஆகியோர்களை கைது செய்யப்பட்டனர்.

விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து இந்த வழக்கில் கொள்ளையடிக்க பயன்படுத்திய கண்டெய்னர் ஈச்சர், கொள்ளையடித்த பணம் ரூ.69,120 மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 நாட்டு கை துப்பாக்கிகள் மற்றும் 9 தோட்டாக்கள், 5 மங்கி குல்லா, 5 செட் கையுறைகள், வெல்டிங் மிஷின், கேஸ் சிலிண்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர், கேஸ் கட்டர், ராடு, ஸ்குரு டைவர், கட்டிங் பிளேடு, ஸ்பேனர்,
நைலான் பெல்ட், பெயிண்டிங் ஸ்பிரே, மேலும் திருடப்பட்ட யுவுஆ இயந்திரம் உடைந்த நிலையில் விஜயமங்கலம், சரலைக்கு அருகிலும் கைப்பற்றப்பட்டது.

மேலும் இந்த வழக்கின் எதிரிகள் பெருந்துறை, ஈங்கூர், நல்லிகவுண்டம்பாளையம் பாலசுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வாகனத்தை திருடிச் சென்று மேற்படி கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தியும், பிறகு ஏ.டி.எம் மெஷினை கண்டெய்னர் ஈச்சர் லாரிக்கு மாற்றி எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.மேற்படி வழக்கில்
கைது செய்த எதிரிகளை ஊத்துக்குளி கனம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை
நடுவர் அவர்களின் நீதிமன்ற காவலலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு எதிரியை பிடித்த தனிப்படையினருக்கு தினகரன், இ.கா.ப., மேற்க்கு மண்டல, காவல்துறை தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் படிக்க