May 3, 2018
தண்டோரா குழு
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வழங்கினார்.
2017ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதையடுத்து 65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில்,11 பேருக்கு மட்டும் தேசிய விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விருது வழங்கினார்.மீதமுள்ளவர்களுக்கு, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்கினர்.குடியரசுத்தலைவர் கையால் விருது வழங்காததால் 68 பேர் விழாவை புறக்கணித்தனர்.
இந்நிலையில்,சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் திரைப்படத்திற்காகாவும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு தேசிய விருதுகளை பெற்றார்.