• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏழை மாணவருக்கு இலவச உபநயண ப்ரம்மோபதேச சுபமுகூர்த்த விழா

March 14, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில் ஏழை மாணவருக்கு இலவச உபநயண ப்ரம்மோபதேச சுபமுகூர்த்த விழா நடைபெற்றது.

அந்தணர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ.ஜெயபிரகாஷ்ராவ்ஆணைப்படியும் பொதுச் செயலாளர் மாங்காடு ஸ்ரீ G.பாலாஜி ஆத்ரேயா ஆலோசனைப்படியும் மாநில பொருளாளர் ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவை பணிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் ஏழை மாணவருக்கு இலவச உபநயண ப்ரம்மோபதேச சுபமுகூர்த்த விழா நடைபெற்றது.

இதில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் செல்வம், கண்ணன், சோமசுந்தரம், செல்வகணபதி, செந்தில் சிவம்,ஞானஸ்கந்தன், பாலசுப்பிரமணியன், சரபேஸ்வரன், பிரவீன்,மற்றும் மாநில மகளிர் அணி துணை செயலாளர் வேதநாயகி, மாவட்ட நிர்வாகிகள் துர்கா மகாலட்சுமி,அமலா பிரபாவதி, ஸ்ரீபிரியா உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க