February 10, 2023
தண்டோரா குழு
கோவையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 2,100 கிலோ ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்ற வழக்கில், கடந்த ஏழு வருடங்களாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு பழைய சந்தை கடை பகுதியைச் சேர்ந்த கட்டை நாசர்( 29) என்பவரை கோவை மண்டல குடிமை பொருள் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவு பேரில் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் மேனகா மற்றும் உதவியாளர் அர்ஜுன் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடி வந்தனர்.
இதனிடையே நாசரை கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 2013 – 2014ஆகிய காலங்களில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு கடத்தியதற்காக சுமார் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.