ஏமன் நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான மோதலில் 66 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து ஏமன் நாட்டின் அரசு படைத் தலைவர் ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 22) கூறுகையில்,
”ஏமன் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பாப்-அல்-மந்தப் என்னும் இடத்தில் சவூதி நாட்டின் தலைமையில் வான்வழித் தாக்குதல் நடந்தது. இதில், ஷியா ஹுத்தி போராளிகள் மற்றும் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா விசுவாசிகள் 52 பேரும் அரசாங்க படை வீரர்கள் 14 பேரும் உயிரிழந்தனர்” என்றார்.
ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், “ஏமன் நாட்டில் தொடங்கிய உள்நாட்டுப் போராட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் முழு சிவில் யுத்தமாக மாறியது. இதில் 1௦,௦௦௦ பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த போர் மத்திய கிழக்கு நாடுகளில் பட்டினி மற்றும் நோயை அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு