April 16, 2018
தண்டோரா குழு
ஏப்.23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் அறிவி்த்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 23-ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும். திமுக, மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும். அனைத்துக்கட்சி சார்பில் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார்.