• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜபல்பூர் – கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில்

March 28, 2022 தண்டோரா குழு

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் 1 ம் தேதி முதல் மே 27 ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, ஜபல்பூரில் வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.40 மணிக்கு கோவையை வந்தடையும்.

இதேபோல், கோவையில் இருந்து ஏப்ரல் 4 ம் தேதி முதல் மே 30 ம் தேதி வரை திங்கள்கிழமைகளில் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் புதன்கிழமை காலை 8.45 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும்.இந்த சிறப்பு ரயிலானது,பாலக்காடு, ஷோரனூர், கோழிக்கோடு,கண்ணூர்,ரத்னகிரி, மங்களூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க