February 28, 2021
ஏபிபி நெட்வொர்க்-சி வோட்டர் கருத்துகணிப்பு, தென் மாநிலங்களுக்கான இரண்டாவது கருத்து வாக்கெடுப்பு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளது.
ஏபிபி நெட்வொர்க் – சி வோட்டர் கருத்து வாக்கெடுப்பில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 41.4 சதவீத வாக்குகளும் தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையிலான
தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு 28.6 சதவீதம் வாக்குகளும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
கேரளாவில் எல்.டி.எஃப்-க்கு 40.1 சதம் வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது என்று கணக்கெடுப்பில்
கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான 2021-ம் ஆண்டிற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ஏபிபி நெட்வொர்க் இந்த மூன்று
பிராந்தியங்களுக்கான தனது இறுதி கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.
ஏபிபி நெட்வொர்க் தனது கருத்துக்கணிப்பு கூட்டு நிறுவனமான சி-வோட்டர் உடன் இணைந்து இந்த பிராந்தியங்களில் வாக்குகள் தொடர்பான சூழலைப் பற்றிய தெளிவான நிலையை வழங்கும் நோக்கில் கருத்துக்கணிப்பு
முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.
ஏபிபி நெட்வொர்க், வெகு சமீபத்தில் ஜனவரி மாதம் ஐந்து மாநிலங்களுக்கான முதல்
சுற்றுக் கருத்துக் கணிப்பை நடத்தியது, இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தமிழ்நாட்டிலும், எல்.டி.எஃப் கேரளாவிலும், என்.டி.ஏ. புதுச்சேரியிலும் தேர்தல்
களத்தில் முன்னணியில் இருப்பதாக தெரியவந்தது.
இந்த கருத்துக் கணிப்புகள்
முடிவுகள் தெற்கு பிராந்தியத்தில் ஏபிபி நெட்வொர்க்கின் வலுவான ஆரம்பத்தையும், நம்பகத்தன்மையும் குறிப்பதாக அமைந்திருக்கின்றன.மேலும் ஏபிபி நெட்வொர்க்
வெகு விரைவில் தமிழகத்தில் தனது செயல்பாடுகளை தொடங்க அதிக நுழைய வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் கருத்துப்படி, யுபிஏ 41.4 சதம் வாக்குகளைப் பெற்று (154 முதல் 162 இடங்கள்) தமிழகத்தில் முன்னணியில் உள்ளது என்றும், என்டிஏ 28.6 சதம் வாக்குகளைப் பெற்று (58 முதல் 66 இடங்கள்) இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் ஏபிபி நெட்வொர்க்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு மிகவும் பொருத்தமான முதல்வர் வேட்பாளர் யார் என்று கணக்கெடுப்பில் கேட்கப்பட்டபோது,மு.க.ஸ்டாலின் 39.4 சதம் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார், அதே நேரத்தில் 32.1 சதம் வாக்குகளைப் பெற்று மக்களிடையே மிகவும் பிரபலமான இரண்டாவது தேர்வாக எடப்பாடி கே பழனிசாமி இடம் பெற்றிருக்கிறார்.

புதுச்சேரியில் என்.டி.ஏ 45.8 சதம் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது, யுபிஏ 36.2 சதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், என்.ரங்கசாமி 45.8 சதம்வாக்குகளைப் பெற்று மாநிலத்தில் மிகவும் விரும்பத்தக்க முதல்வர் வேட்பாளராக இருக்கிறார் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கேரளாவில், எல்.டி.எஃப் 40.1 சதம் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது, யு.டி.எஃப் 32.6 சதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. மிகவும் பிரபலமான முதல்வர்
வேட்பாளர்களின் பட்டியலில்,பினராயி விஜயன் 38.5 சதம் வாக்குகளைப் பெற்று முதலிடத்தையும், உம்மன் சாண்டி 27.0 சதம் வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.
