December 21, 2022
தண்டோரா குழு
கோவையில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் ரூ. 3.70 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் தனியார் வங்கி கிளைக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் ஒரே ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 39 பரிவர்த்தனைகளில் ரூ. 3.73 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. மோசடி கும்பல் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்து இந்த மோசடியை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் வங்கி நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம்மில் பணம் எடுத்து மோசடி செய்த கும்பலை தேடி வருகிறார்கள்.