July 3, 2018
தண்டோரா குழு
கோவையில் ஏடிஎம் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமராவை பயன்படுத்தி பொதுமக்கள் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்த 6 பேரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்தவர்களின் வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தமிழரசன்,வாசு மற்றும் சென்னையை சேர்ந்த நிரஞ்சன்,இலங்கை அகதி லவசாந்தன்,திருச்சியை சேர்ந்த கிஷாக்,திருப்பூரை சேர்ந்த மனோகரன் 6 பேரையும் கடந்த ஜூன் 22 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கிருஷ்ணகிரியில் கைது செய்தனர்.மேலும்,கைது செய்யப்பட்ட இவர்களை வரும் 7ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.