• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

May 22, 2018 தண்டோரா குழு

எஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ் வி சேகர் மீது,சென்னையில் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.இவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியது.ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.இதையடுத்து, எஸ்வி. சேகர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,

எஸ்.வி.சேகரை கைது செய்ய ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மேலும், எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க