June 13, 2018
தண்டோரா குழு
எஸ்.வி.சேகரை கைது செய்ய அதிமுக அரசு தயங்குகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால்,எஸ்.வி.சேகர் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால்,20 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்.சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதியில்லை என தெரிவித்ததால்,எஸ்.வி.சேகர் பற்றி ஸ்டாலின் பேச சபாநாயகர் தொடர்ந்து அனுமதிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
“தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால்,நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.சுதந்திரமாக அவரை வெளியே விட்டுள்ளனர்.நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டும் போலீஸ் துணையுடன் எஸ்.வி.சேகர் நடமாடுகிறார்” என கூறினார்.