August 11, 2021
தண்டோரா குழு
லஞ்சம் ஒழிப்பு துறையின் சோதனையின் போது அனுமதியின்றி கூட்டம் கூடிய 10 சட்டமன்ற உறுப்பினர் உட்பட 500 பேர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது.
கோவை சுகுணாபுரம் பகுதியில்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் கூடினர்.
இந்நிலையில்,சோதனை நடத்திய போது வீட்டின் முன்பு கூட்டமாக கூடியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், கிணத்துக்கடவு தாமோதரன் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.