• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ் பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்

September 14, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ஊழல் டெண்டர்களில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ் பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த ஊழல்களை அறப்போர் இயக்கம் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்துள்ளது.அதன் மீது தற்பொழுது லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, அவரது நெருங்கிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில கோவை மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்தது நாம் அறிந்ததே. தற்பொழுது கோவை மாநகராட்சியை நேர்மையான மாநகராட்சியாக மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம்
கீழ்க் கண்ட கோரிக்கைகளை வைத்துள்ளோம்.

அந்த கோரிக்கைகள் பின்வருமாறு:

கோவை மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக செட்டிங், மோசடி மற்றும் ஊழல் டெண்டர்களில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்
எஸ் பி.வேலுமணிக்கு நெருக்கமான செந்தில் அண்டு கோ, கே சி.பி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், வரதன் இன்ப்ரா,
கான்ஸ்டிரானிக்ஸ் இந்தியா, ராஜன் ரத்தினசாமி, ராபர்ட் ராஜா போன்ற நிறுவனங்களை கருப்பு பட்டியலில் உடனடியாக சேர்க்க வேண்டும்.

மேலும் இந்த ஊழல் டெண்டர்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.ஒரே டெண்டரில் போட்டிபோடும் இருவர் நிறுவனத்தின் இயக்குனர்
ஒரே நபராக இருந்தாலோ, அல்லது நேரடி சொந்தக்காரர்களாக இருந்தாலோ அவர்கள் டெண்டரில் போட்டி போட தடை விதிக்க வேண்டும்.

கோவை மாகராட்சி டெண்டர்களை முழுக்க முழுக்க இ-டெண்டர்களாக மாற்ற வேண்டும். டெண்டர்களில் வெளிப்படைதன்மை வேண்டும். டெண்டரில் போட்டி போட்டவர்கள் யார், எவ்வளவு விலைக்கு எந்த டெண்டரை
எடுத்துள்ளார்கள்,டெண்டர்களில் செய்ய வேண்டிய வேலைகள் எவை போன்ற விவரங்கள் www.tntenders.gov.in இணையதளத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோவை மாநகராட்சி அதிகாரிகளால் மறைக்கப்பட்டு வருகிறது. அதை உடனே சரி செய்ய வேண்டும்.அதே போல் அரசாங்க அனுமதி பெறாமல் டெண்டர்களை பிரித்து விடப்படுவது
நிறுத்தப்பட வேண்டும்.

சாலை போடும் பொழுது சாலை உயராமல் அதற்கேற்ப சாலையை தோண்டி எடுத்து அதே உயரதிற்கு சாலை போடும் முறை கையாள வேண்டும்.டெண்டர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் விலை, சந்தை மதிப்பு போன்றவை சரிபார்த்து உண்மையான சந்தை மதிப்பிற்கு சரி
செய்யப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாய் இணையத்தில் ஏற்றாத மன்ற தீர்மானங்கள்
தற்பொழுது ஏற்றப்பட்டது வரவேற்கத்தக்கது.

எந்த தாமதமும் இல்லாமல் அவை மாதா மாதம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
சந்தை மதிப்பு மாதத்திற்கு சதுரடிக்கு ரூ 105 உள்ள ஆர்.எஸ்.புரத்தில்வெறும் ரூ 5 க்கு ஆலயம் டிரஸ்ட் மற்றும் முன்னாள் அமைச்சர்
வேலுமணியின் நல்லறம் டிரஸ்டுக்கு அம்மா ஐஏஎஸ் அகாடமி நடத்த கொடுக்கப்பட்ட கோவை மாநகராட்சி 5400 சதுரடி நிலம் மற்றும்
கட்டிடம் திரும்பப் பெற்று கோவை சுகாதார ஆய்வாளர்அலுவலகத்திற்கு தரப்பட வேண்டும்.
கோவை மாநகராட்சி இணையதள புகார் வழிமுறை நம்ம சென்னை புகார் வழிமுறை போல மேம்படுத்தப்பட வேண்டும்.புகார் பிரச்சனை தீர்க்காமல் மூடப்பட்டால் மக்கள் புகாரை மீண்டும் திறந்து அதை
மேலதிகாரிக்கு தெரிவிக்கும் வழிமுறையை உருவாக்க வேண்டும்.

லஞ்ச ஒழிப்பு துறையினரால் ரைய்டு செய்யப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயராம் வெங்கடேசன் கூறினார்.

மேலும் படிக்க