March 13, 2018
தண்டோரா குழு
எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்காதவர்களுக்கான அபராதக் கட்டணம் 75% வரை குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகை சராசரியை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில்,நகர்புறங்களில் வசூலிக்கப்பட்டு வந்த அபராதக் கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.15ஆகவும், வளர்ந்து வரும் நகரங்களில் அபராதம் ரூ.12ஆகவும், கிராமப்புற பகுதிகளில் ரூ.10ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.