March 29, 2021
தண்டோரா குழு
எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் மேம்பால பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி அளித்தார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய் யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் போட்டியிடுகிறார். இந்நிலையில்,
எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் டார்ச்லைட் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது தொகுதியில் அவர் பேசியதாவது:
இந்த பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை. குப்பைகளை முறையாக அள்ளுவது இல்லை. தொடங்கப்பட்ட மேம்பால பணியை கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் மக்கள் மெயின் ரோடு செல்ல வழியின்றி விமான நிலையம் வழியாக அதிக தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேம்பால பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இந்த தொகுதியில் மேலும் ஒரு அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.
இவ்வாறு கூறினார்.
இதைதொடர்ந்து மாலையில் டாக்டர் மகேந்திரன் பீளமேடு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, திருமால் நகர்,சந்திரா காந்தி நகர்,கருணாநிதி நகர், பழனியப்பா நகர்ஜி ஆர் டி நகர்,பாலசுந்தரம் நகர், உடையாம்பாளையம், ராஜீவ் நகர்,அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட வீதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.