• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் நெக்ஸ்ட் ஜென் பன் ஃபேர் இணைய விளையாட்டு விழா

November 29, 2024 தண்டோரா குழு

கோவை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனம்,கோவை விழாவுடன் இணைந்து புதுமை,படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கைத் தடையின்றி ஒன்றிணைக்கும் நிகழ்வான நெக்ஸ்ட் ஜென் பன் ஃபேர் என்னும் டிஜிட்டல் விளையாட்டு விழா கண்காட்சி,கோவை சிங்காநல்லூரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்.ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் வளாகத்தில்
நடைபெற்றது.

நிகழ்வினை நிறுவனர் டாக்டர் மணிமேகலை மோகன் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலையில் கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுவேதா சுமன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியானது அடுத்த தலைமுறை வேடிக்கைக் கண்காட்சி,புதுமை மற்றும் திறமைகளின் மையமாக இசை நிகழ்ச்சிகள்,மாதிரி விண்வெளி கோளரங்கம் ஆரோக்கியமான உணவுக் கடைகள்,மற்றும் அறிவு சார்ந்த புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும்,அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அதி நவீன இணைய விளையாட்டுகள் திறமையை வெளிக்காட்ட திறந்த வெளி மேடை வரை மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இதில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1வரை மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியினை பொது மக்களும் இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க