• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்வி சேகரை கண்டுபிடித்து தருமாறு துண்டு பிரசுரங்களை விநியோகித்த கோவை பத்திரிக்கையாளர்கள்

May 21, 2018 தண்டோரா குழு

பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய எஸ்வி சேகரை காணவில்லை எனவும், தேடப்படும் குற்றவாளியாக இருப்பதாகவும் இவரை நேரில் பார்த்தால் உடனடியாக கோவை மாவட்ட காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.வி சேகர் மீது, சென்னையில் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இவரை கைது செய்ய நீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் எஸ்.வி சேகர் தேடப்படும் குற்றவாளியாக இருப்பதாகவும் எனவே இவரை நேரில் பார்த்தாலோ, அல்லது இவர் இருக்கும் இடம் தெரிந்தாலோ, உடனடியாக கோவை மாநகர காவல் துறை ஆணையாளர், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவுக்கும் படி தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

அந்த துண்டு பிரசுரத்தில் காணவில்லை என்று எஸ்வி.சேகர் புகைபடம் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் தொடர்பு எண்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க