• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல் – மஜக_கண்டனம்

March 10, 2020

எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் மீது கொலை வெறி தாக்குதலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது அக்கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் இக்பால் இன்று சமூக விரோதிகளால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கோவையில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் சங்பரிவார அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இதை வன்மையாக கண்டிப்பதோடு இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ள அனைவரின் மீதும் அவர்களை தூண்டிவிடும் தலைவர்கள் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை குறிப்பாக கோவையை கலவர பூமியாக மாற்ற சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர் இறை தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக தடுக்க வேண்டும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க