• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் மணிமேகலை மோகனுக்கு விருது

April 5, 2023 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் பட்டய நாள் விழா மற்றும் தொழிலில் சிறந்து விளங்குவோருக்கான விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் மணிமேகலை மோகனுக்கு, கோவை மாநகர காவல் ஆணையர் முன்னிலையில் ரோட்டரி மாவட்ட கவர்னர் விருதினை வழங்கினார்.

கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஐடிசி ஓட்டலில் ஏப்ரல் 4ல் நடந்த விழாவில், கோவை மாநகர காவல் ஆணையர் வி, பாலகிருஷ்ணன், சாகோதரி கோதை ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்றனர். விருது பெற்றவர்களை ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் அபர்ணா சுங்கு மற்றும் செயலாளர் சிரக் வோரா ஆகியோர் விருது பெற்றவர்களின் தன்னிகரற்ற சேவைகளை பாராட்டினர்.

ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் அபர்ணா சுங்கு அனைவரையும் வரவேற்றார். கடந்த நான்கு ஆண்டுகளில் ரோட்டரி கிளப் ஆற்றி வரும் சேவைகள், திட்டங்கள் குறித்து விளக்கினார்.

விழாவில், எஸ்.எஸ்.விஎம் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மணிமேகலை மோகனுக்கு, தலைவர் அபர்ணா சுங்கு கிரீடம் அணிவித்து கவுரவித்தார். பாராட்டு பத்திரமும் வாசிக்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், மணிமேகலை அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி பேசுகையில், “எஸ்.எஸ்.விஎம் கல்வி நிறுவனம் தரமான கல்வியை தருவதோடு, பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைத்து வருகிறது. ஒழுக்கம், பண்பாடுகளை பராமரித்து வருகிறது,” என்றார்.

ரோட்டரி மாவட்டம் 3201 கவர்னர் ராஜ்மோகன் நாயர், தொழிலில்களில் சிறப்பாக செயல்படுவதன் அவசியத்தையும், அதற்கான பாராட்டுக்கள், விருதுகள் வழங்கி பாராட்டப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார். அதோடு, சிறப்பான சேவையாற்றுவோரை தேர்வு செய்யும் ரோட்டரி கிளப் முறையையும் பாராட்டினார்.
பிரம்மகுமாரிகள் அமைப்பாளர் சகோதரி கோதை, சிறப்பான வாழ்க்கைக்கு தேவையான பயணமுறைகள் குறித்து விளக்கினார்

மேலும் படிக்க