• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்என்எஸ் இன்னவோஷன் ஹப் மற்றும் கோவை எஸ்என்எஸ் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் 1 கோடி ரூபாய் தொழில் திட்டம் துவக்கம்

August 24, 2021 தண்டோரா குழு

எஸ்என்எஸ் இன்னோவேஷன் ஹப், எஸ்என்எஸ் கல்விக்குழுமங்கள் இணைந்து ஒரு கோடி ருபாய் நிதியுதவிக்கான தொழில் துவக்க வாய்ப்பினை கடந்த ஆகஸ்ட் 20, 2021 ல் நடத்தியது. இதற்கான நிதியுதவியை, சென்னை, பயோஇன்குபேட்டர் ஐஐடிஎம், மற்றும் பெங்களுரு செல்லுலார் மற்றும் மாலிக்குலார் பிளாட்பார்ம்ஸ் (C-CAMP), இணைந்து மேற்கொண்டன.

பிராக்ஸ் எனப்படும், உயிரி தொழில்நுட்பம் ஆரம்ப கட்ட நிதியுதவி திட்டத்தில் முதன்மை கவனம் செலுத்தப்படும். இந்த திட்டத்தில், பொருளாதார முன்னேற்றத்துக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தனி நபர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும். புதியவற்றை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், சந்தைக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் துவக்கம் இதன் ஒரு பகுதியாக இருக்கும். வெற்றிகரமான கண்டுபிடிப்பாளர், தயாரிப்பை வணிகப்படுத்த தலா 50 லட்ச ருபாய் நிதியுதவி பெறுவர். இதன் மிக முக்கிய பயன், வெற்றிகரமாக செயல்படுத்தும் நிலையில் ஒரு கோடி ருபாய் வரை நிதியுதவி பெறுவர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, பெங்களுரு சி-கேம்ப் திட்ட மேலாளர் டாக்டர் நித்யா ராமன் நடத்தினார். சி-கேம்ப் நிதியுதவிள் மற்றும் முதலீடு வாய்ப்புகள் மற்றும் உயிரி தொழில்நுட்ப துவக்க நிதி (பிக்) போன்றவை குறித்து அவர் விளக்கினார். பங்கேற்பாளர்கள், உயிரி தொழில்முனைவோராக எப்படி பயணத்தை தொடங்குவது என்பது பற்றியும், ஒருங்கிணைந்த பிக் பங்குதாரராக இணைந்து செயல்படுவது, வணிகப்படுத்தும் வகையிலான தீர்வுக்கான யோசனைகளை உருவாக்குதல் பற்றியும் விழிப்புணர்வு பெற்றனர்.

சி-கேம்ப், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. 250க்கும் மேற்பட்ட துவக்க தொழில் நிலை உதவிகளை பல்வேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் செயல்படுத்தியுள்ளது. இரண்டாம் நிலை, 3ம் நிலையில் உள்ள தொழில்முனைவோர், தொழில் துவங்குவோர் மற்றும் மேலாண்மையில் இருப்போருடன் இணைந்து பங்காற்ற முனைந்து வருகிறது. மருத்துவ கருவிகள், பரிசோதனைகள், மருந்துகள், விவசாயம், வேளாண் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப தொழில்கள், வீணான பொருளை மதிப்புமிக்கதாக மாற்றுதல் போன்றவைகளை அடிப்படை கருத்தக்கமாக கொண்டு விவாதித்து வருகிறது.

இந்த கலந்துரையாடல் வெபினாரில், ஐஐடிஎம் பயோஇன்குபேட்டர் முதுநிலை மேலாளர் டாக்டர் பிரியா, பெங்களுரு சி-கேம்ப் திட்ட மேலாளர் டாக்டர் நித்யா ராமன், எஸ்என்எஸ் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எஸ்.என் சுப்ரமணியன், தாளாளர் டாக்டர். எஸ்.ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார், ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் டாக்டர் எஸ்.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், நிபுணர்கள் பங்கேற்று இந்த திட்டம் குறித்து அறிந்தனர். இந்த திட்டம் புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை வரும் 2021 செப்டம்பர் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு எஸ்என்எஸ் இன்னோவேஷன் ஹப் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் எஸ்.பிரகாஷ் அவர்களை [email protected] என்ற இணையத்தள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க