• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எவ்வாறு என்னை நீக்க முடியும்? – கருணாஸ்

March 28, 2017 தண்டோரா குழு

மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்ட பிறகு அவர்கள் எவ்வாறு என்னை நீக்க முடியும்? என்று நடிகரும், தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் நின்று திருவாடானை தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன், முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை கூண்டோடு கருணாஸ் கலைத்தார்.

இந்நிலையில் கருணாசை கட்சியை விட்டு நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாண்டித்துரை இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இது குறித்து கருணாஸ் கூறுகையில் “ கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்ட பிறகு அவர்கள் எவ்வாறு என்னை நீக்க முடியும்?” என்றார் நடிகர் கருணாஸ்.

மேலும் படிக்க